Published : 25 May 2018 08:42 AM
Last Updated : 25 May 2018 08:42 AM

இயக்குநராகும் ஒளிப்பதிவாளர்

ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பை பெற்ற ஸ்பானிஷ் படம் ‘ஜூலியாஸ் ஐஸ்’ (JULIA'S EYES). ஜூலியா என்ற பெண், தன் சகோதரியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழக்கிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதையின் கரு. தற்போது இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவாளர் கபீர் லால் தயாரித்து, இயக்க உள்ளார். இவர் ‘அப்னே’, ‘வெல்கம் பேக்’ உள்ளிட்ட இந்தி படங்களிலும், ‘ஆதித்யா 369’, ‘பைரவ தீபம்’ , ‘அந்தரிவாடு’ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், தமிழில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். அவர் கூறும்போது, ‘‘சுவாரசியமான ‘ஜூலியாஸ் ஐஸ்’ திரைக்கதையை முதலில் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளேன். அடுத்தடுத்து பல மொழிகளிலும் ரீமேக் செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x