Published : 22 May 2018 05:57 PM
Last Updated : 22 May 2018 05:57 PM

“தூத்துக்குடி வன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு” - ரஜினிகாந்த்

‘தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப் போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொதுஜன உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x