Published : 09 May 2018 06:12 PM
Last Updated : 09 May 2018 06:12 PM

“நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது” - கஸ்தூரி வேதனை

‘நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

ஆவடி அடுத்த பாலவேட் டைச் சேர்ந்தவர் ராஜ்வேலு. இவர், ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான வாகனக் கிடங் கில் பணியாற்றுகிறார். தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் ராஜ்வேலு, அவரது மனைவி செல்வி, மகள் சங்கீதா, மகன் திருமணிசெல்வம் ஆகிய 4 பேரும் கடந்த 4-ம் தேதி காஷ்மீருக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

கடந்த 7-ம் தேதி குல்மார்க் என்ற இடத்தை சுற்றிப் பார்க்கச் சென்றபோது, ஸ்ரீநகர்- குல்மார்க் சாலையில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக் கும் மோதல் வெடித்தது. அப்போது வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கியதில் செல்வியும் திருமணி செல்வமும் காயம் அடைந்தனர். இருவரும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருமணி செல்வம் உயிரிழந்தார்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கே.பழனிசாமி அவரது குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், ஸ்ரீநகரில் இருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் உதவியுடன் விமானம் மூலம் திருமணி செல்வம் உடல் நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு, அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில், ‘நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார் கஸ்தூரி. “திருமணியைக் கல்லெறிந்து கொன்ற மூர்க்கர்களைக் கண்டித்து நம்ம தலைவர்கள் யாரும் வாயே திறக்காதது ஏன்? காஷ்மீர் தீவிரவாதிகளை, தேசத்துரோகிகளை விமர்சித்தால், தமிழ்நாடு இஸ்லாமியர்களின் வெறுப்பைப் பெறவேண்டி வரும் என்ற கணக்கா? என்றால், நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘காலா’ இசை வெளியீட்டு விழா: அரசியல் பேசுவாரா ரஜினிகாந்த்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x