Published : 14 May 2018 03:35 PM
Last Updated : 14 May 2018 03:35 PM

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியது விஜய் டிவி

கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. கார்த்தி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், நாயகியாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். கார்த்தியின் மாமா பெண்ணாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சத்யராஜ், பொன்வண்ணன், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, ஸ்ரீமன், செளந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். சென்னை, தென்காசி, காரைக்குடி பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல, ஆன்லைன் ஒளிபரப்பு உரிமை அமேஸான் ப்ரைமுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தப் படம், ‘சின்ன பாபு’ என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸாக இருக்கிறது.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘இரும்புத்திரை’ செலிபிரிட்டி ஷோ புகைப்படங்கள்

‘நடிகையர் திலகம்’ மேக்கிங் வீடியோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x