மலையாளத்தில் மாஸ் காட்டும் சரத்குமார் - ‘ஆபரேஷன் ராஹத்’ டீசர் எப்படி? 

மலையாளத்தில் மாஸ் காட்டும் சரத்குமார் - ‘ஆபரேஷன் ராஹத்’ டீசர் எப்படி? 
Updated on
1 min read

சென்னை: சரத்குமார் மலையாளத்தில் நடிக்கும் ‘ஆபரேஷன் ராஹத்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி? - தொடக்கத்தில் வறண்ட பாலைவனமும், பாழடைந்த கட்டிடங்களும் காட்டப்படுகின்றன. அந்த ஏமன் நாடு எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்நாட்டில் இந்தியப் பெண்மணி ஒருவர் சிக்கிக்கொள்கிறார். சுற்றிலும் வெடிகுண்டுகள் வெட்டிகின்றன. தோட்டாக்கள் தெறிக்கின்றன. அவரை யாரோ துரத்திக்கொண்டிருக்க உதவியின்றி தவிக்கிறார். தொடர்ந்து இந்திய அரசு அவரை மீட்கும் முனைப்பில் இருக்கிறது.

இந்தச் சூழலில் தான் ‘மீட்பராக’ மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் சரத்குமார். முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு சஸ்பென்ஸ் காட்டும் அவர், ஒரு கட்டத்தில் அதனை அவிழ்த்துவிட்டு, ‘நான் வருகிறேன்’ என கூற ட்ரெய்லர் முடிகிறது. ஏமன் நாட்டில் சிக்கியிருக்கும் பெண்ணை இந்திய அதிகாரியான சரத்குமார் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ‘ஆபரேஷன் ராஹத்’ என தெரிகிறது.

ஆபரேஷன் ராஹத்: நடிகரும், இயக்குநருமான மேஜர் ரவி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மாளவிகா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. டீசர் எப்படி?:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in