ஹாரரும்… ஆக்‌ஷனும் - ஹன்சிகாவின் ‘காந்தாரி’ ட்ரெய்லர் எப்படி?

ஹாரரும்… ஆக்‌ஷனும் - ஹன்சிகாவின் ‘காந்தாரி’ ட்ரெய்லர் எப்படி?

Published on

சென்னை: ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: தொடக்கத்திலேயே ‘கந்தர்வ கோட்டை’ எனப் பெயரிடப்பட்டுள்ள கட்டிடம் ஒன்று காட்டப்படுகிறது. அனுஷ்காவின் ‘அருந்ததி’ படத்தில் வந்த பெயரை மீண்டும் மறுஆக்கம் செய்திருக்கிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடக்க வழக்கமான தோற்றத்தில் இருக்கும் ஹன்சிகா மிரள்கிறார்.

அடுத்து ஃப்ளாஷ்பேக் கதை ஒன்று இருப்பது போல தெரிகிறது. அதன் பிறகு பேய் வேடமிட்ட ஹன்சிகா டெரர் லுக்கில், அதிரடி காட்டுகிறார். ஆனால் ஹன்சிகாவுக்கு அந்த தோற்றம் கச்சிதமாக பொருந்தாத உணர்வைத் தருகிறது. வேறு எதுவும் ட்ரெய்லரில் புதுமையில்லை. ‘இது நான் காவல் காக்குற இடம், யாருக்கும் அனுமதியில்லை’ என ஒரே ஒரு வசனம் மட்டும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

காந்தாரி: ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், ‘காந்தாரி’. ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ள இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுதியுள்ளார். எமோஷனல் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in