மம்மூட்டி எடுத்த புகைப்படம் ரூ.3 லட்சத்துக்கு  ஏலம்!

மம்மூட்டி எடுத்த புகைப்படம் ரூ.3 லட்சத்துக்கு  ஏலம்!
Updated on
1 min read

நடிகர் மம்மூட்டிக்கு நடிப்பைத் தாண்டியும் பல்வேறு விஷயங்களில் ஈடுபாடு உண்டு. கார்களின் காதலரான அவர், பல்வேறு மாடல் கார்களை வைத்திருக்கிறார்.

புகைப்படம் எடுக்கும் ஆர்வமும் உண்டு. இதற்காக விலையுயர்ந்த கேமராக்களை வாங்கி வைத்துள்ளார். சக நடிகர்களையும் இயற்கை காட்சிகளையும் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் அவர் எடுத்த பறவை புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்தப் புகைப்படம், மறைந்த புகழ்பெற்ற பறவையியலாளரும், எழுத்தாளருமான கே.கே.நீலகண்டன் என்ற இந்துச்சூடனின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கொச்சியில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

அதை ரூ.3 லட்சத்துக்கு கோட்டக்கல்லைச் சேர்ந்த அச்சு என்ற தொழிலதிபர் வாங்கியுள்ளார். புதிதாக உருவாகும் நட்சத்திர ஓட்டலில் அந்தப் புகைப்படம் இடம்பெற இருக்கிறது. ஏலத் தொகையை, இந்துச்சூடன் அறக்கட்டளைக்கு மம்மூட்டி வழங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in