‘இந்தியன்’ தாத்தாவால் 106 வயதில் சண்டை போட முடியுமா? - ஷங்கர் விளக்கம்

‘இந்தியன்’ தாத்தாவால் 106 வயதில் சண்டை போட முடியுமா? - ஷங்கர் விளக்கம்
Updated on
1 min read

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’ . ஜூலை 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. படத்தில் கமல்ஹாசன், இந்தியன் தாத்தாவாக பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். அவர் ஆக்‌ஷன்காட்சியில் பறந்து பறந்து சண்டையும் போட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படம் 1996-ல் வெளியானது. அந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவான சேனாபதிகேரக்டர் 1918-ம் ஆண்டு பிறந்ததாகக் கூறப்பட்டிருக்கும். அதன்படி பார்த்தால், இந்தியன் தாத்தாவின் தற்போதைய வயது 106. இந்த வயதில் ஒருவர், எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும்? என செய்தியாளர் ஒருவர் ஷங்கரிடம் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ஷங்கர், “சீனாவில், லூசி ஜியோன் என்கிற மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் இருக்கிறார். 106 வயதான அவர் இப்போதும் மார்ஷியல் ஆர்ட்ஸ்பயிற்சி மேற்கொள்கிறார். பறந்து சண்டைபோடுகிறார். அதுபோல இந்தியன் தாத்தாவான சேனாபதி கதாபாத்திரம் வர்மக்கலையில், மாஸ்டர். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாட்டோடு, யோகா, தியானம்போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவராகவும், ஒழுக்கத்துடனும்இருந்தால், வயது ஒரு பொருட்டல்ல. எந்த விதமான ஸ்டன்ட் வேண்டுமானாலும் செய்யலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in