சுரேஷ் கோபியின் 250-வது படம் ‘வராஹம்’ - கிளிம்ஸ் வீடியோ எப்படி?

சுரேஷ் கோபியின் 250-வது படம் ‘வராஹம்’ - கிளிம்ஸ் வீடியோ எப்படி?

Published on

திருவனந்தபுரம்: சுரேஷ் கோபியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘வராஹம்’ (Varaaham) மலையாளப் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுரேஷ் கோபி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன்’ மலையாளப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படம் ‘வராஹம்’. இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களைத் தவிர்த்து, நவ்யா நாயர், பிராச்சி தெஹ்லான், ஸ்ரீஜித் ரவி, சந்தோஷ் கீழத்தூர், சாதிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சனல் வி தேவன் இயக்குகிறார். படத்துக்கு ராகுல் ராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கேரளாவின் முதல் பாஜக மக்களவை உறுப்பினராக சுரேஷ்கோபி தேர்வான பின் வெளியாகும் அவரது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிம்ஸ் வீடியோ எப்படி?: 43 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், “நீ ஜல்லிக்கட்டு பாத்திருக்கியா, காளை மாட்டோட கொம்ப பிடிக்க வரும்போது, அது மண்ணுல தன்னோட கொம்ப தொட்டு, பிடிக்க வந்தவனை முட்டி தூக்கும்” என்ற வசனம் பின்னணியில் ஒலிக்க காட்சிகள் வந்து செல்கின்றன.

ஒரு காட்சியில் ஆக்ரோஷமாகவும், மற்றொரு காட்சியில் ஜாலியாகவும் இருவேறு ரியாக்சன்களை பிரதிபலிக்கிறார் சுரேஷ் கோபி. இறுதியில் டைட்டில் ரத்தம் தோய்ந்த மாட்டு கொம்பின் குறியீட்டுடன் வெளிப்படுகிறது. கிளிம்ஸ் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in