மதுரையில் எளிமையாக நடந்த இயக்குநர் அமீரின் மகள் திருமண விழா

திருமண விழா
திருமண விழா
Updated on
1 min read

மதுரை: மதுரையில் எளிமையாக நடந்த இயக்குநர் அமீரின் மகள் திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

மதுரையைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் அமீர். இவரது மகள் அனிநிஷாவின் திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியிலுள்ள தனியார் மண் டபத்தில் நடந்தது. திருமண விழாவுக்கு வந்த திரையுலகத்தினரை இயக்குநர் அமீர் ஆரத் தழுவி வரவேற்றார்.

இவ்விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் சேரன், வெற்றிமாறன், சசிகுமார், சமுத்திரக்கனி, சரவணன், கரு.பழனியப்பன், எஸ் ஆர் பிரபாகரன், சுப்பிரமணியம் சிவா மற்றும் நடிகர்கள் ஆர்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

திருமணத்துக்கு பிறகு சிறப்பு வழிபாட்டின் போது, மணமக்கள் நீடுழி வாழவேண்டி இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கை கூப்பி வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டார். தொடர்ந்து மணமகனோடு சேர்ந்து திரையுலகத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இத்திருமண விழாவில் பங்கேற்றவர்களிடம் மணமக்கள் எந்த பரிசு பொருட்களும் மற்றும் மொய்ப்பணம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in