கார்த்திக் சுப்பராஜின் ‘சூர்யா 44’ முதல் ஷாட் வீடியோ வெளியீடு!

கார்த்திக் சுப்பராஜின் ‘சூர்யா 44’ முதல் ஷாட் வீடியோ வெளியீடு!

Published on

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ‘புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என படக்குழு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது. கிளாப் அடித்து தொடங்கும் காட்சியில் ஒரு குட்டி சுவரில் அமர்ந்திருக்கும் சூர்யா, 80களின் வில்லன் போல பெரிய மீசையும், ஃபங்க் ஹேர்ஸ்டைலும் வைத்திருக்கிறார். பின்னணியில் வரும் சந்தோஷ் நாராயணின் இசை கவனம் ஈர்க்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in