இந்தியில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’ -  ‘தடக் 2’ முதல் தோற்றம் வெளியீடு!

இந்தியில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’ -  ‘தடக் 2’ முதல் தோற்றம் வெளியீடு!

Published on

மும்பை: தமிழில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு இஷான் கட்டர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘தடக்’. இந்தப் படம் மூலம் ஜான்வி கபூர் இந்தியில் நடிகையாக அறிமுகமானார். இது மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் வெளியான ‘சாய்ரட்’ படத்தின் தழுவலாக உருவானது.

இந்நிலையில் இதன் அடுத்த பாகம் ‘தடக் 2’ வெளியாக உள்ளது. இதில் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தழுவாக உருவாகிறது.

தர்மா புரொடக்ஷன் சார்பில் கரண் ஜோஹர் படத்தை தயாரிக்கிறார். இப்படம் நவம்பர் மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள கரண் ஜோஹர், “ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். ஒரு ராணி இருந்தார். அவர்கள் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்” எனப் பதிவிடப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in