Published : 25 May 2024 11:32 PM
Last Updated : 25 May 2024 11:32 PM

கான் விழாவில் சிறந்த நடிகை விருது: வரலாறு படைத்த அனசுயா செங்குப்தா

அனசுயா செங்குப்தா

கான்: கான் திரைப்பட விழாவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகையான அனசுயா செங்குப்தாவுக்கு ‘தி ஷேம்லஸ்’ படத்துக்காக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

77ஆவது கான் திரைப்பட விழா கடந்த மே 15 பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் உலகின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகையான அனசுயா செங்குப்தாவுக்கு ‘தி ஷேம்லஸ்’ படத்துக்காக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதுபெறும் முதல் இந்திய கலைஞர் என்ற பெருமையை அனசுயா பெற்றுள்ளார். பல்கேரிய இயக்குநர் கான்ஸ்டன்டின் போஜானோவ் இயக்கிய ‘தி ஷேம்லஸ்’ திரைப்படத்தில் டெல்லியில் உள்ள ஒரு பாலியல் விடுதியில் இருந்து தப்பித்து ஓடும் ரேணுகா என்ற பெண்ணாக அனசுயா நடித்திருந்தார்.

’தி ஷேம்லஸ்’ தவிர்த்து ’சன்ஃப்ளவர்ஸ் வேர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ’ என்ற கன்னட குறும்படமும், ’பன்னிஹூட்’ என்ற அனிமேஷன் குறும்படமும் இந்தியா சார்பில் விருதுகள் வென்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x