Published : 18 Apr 2018 02:49 PM
Last Updated : 18 Apr 2018 02:49 PM

மீண்டும் வில்லனாக நடிக்கிறார் மிஷ்கின்

‘சவரக்கத்தி’ படத்தைத் தொடர்ந்து இன்னொரு படத்திலும் வில்லனாக நடிக்கிறார் மிஷ்கின்.

ஜி.ஆர்.ஆதித்யன் இயக்கத்தில் வெளியான படம் ‘சவரக்கத்தி’. கதையின் நாயகனாக இயக்குநர் ராம் நடித்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்தார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த மிஷ்கின், வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மிஷ்கின். புஷ்கர் - காயத்ரி மற்றும் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன், இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் தான் வில்லனாக நடிக்கப் போகிறார் மிஷ்கின். தர்புகா ஷிவா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தற்போது பூசாரியாக நடித்து வருகிறார் மிஷ்கின். அத்துடன், சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x