ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்

Published on

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ளது சுப்பிரமணியசுவாமி கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பிறமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வருகை புரிந்து, முருகனை வணங்கிச் செல்வது வழக்கம். அவ்வாறு முருகனை வணங்க வரும் பக்தர்களில், அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில், அர்ச்சகர்கள் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in