Published : 05 Apr 2018 10:31 AM
Last Updated : 05 Apr 2018 10:31 AM

ஏ.ஆர்.ரஹ்மானின் பெருமிதம்

ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பியாண்ட் தி க்ளவ்ட்ஸ்’ படத்தின் இசைத் தொகுப்பு இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கும் இப்படம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே பெரிதும் பேசப்பட்டது. தற்போது இப்படத்தின் இசைத் தொகுப்பு வெளியானதோடு, சமீபத்தில் வெளியான இசைத் தொகுப்பு பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது. அதை மேற்குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘‘பியாண்ட் தி க்ளவ்ட்ஸ் இசை ஆல்பம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டிருப்பதும், அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருவதும் மகிழ்ச்சியளிக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று குறிப்பிட்டுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x