Published : 19 Apr 2018 10:26 am

Updated : 19 Apr 2018 10:26 am

 

Published : 19 Apr 2018 10:26 AM
Last Updated : 19 Apr 2018 10:26 AM

அக்கா – தங்கையின் திட்டம்

‘சிங்கம் 3’ படத்துக்கு பிறகு தமிழில் அப்பா கமல் நடிப்பில் உருவாகவிருந்த ‘சபாஸ் நாயுடு’ படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார், ஸ்ருதிஹாசன். அப்பட வேலைகள் ஆரம்ப கட்டப் பணிகளோடு நின்றதால் தொடர்ந்து தெலுங்கு, இந்தி சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இநிலையில் மராட்டிய இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய இந்திப்படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். குடும்பப் பின்னணி களமாக இப்படம் உருவாகிறது.

தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் தற்போது முழுக்க மும்பைவாசியாக பிரவேசிக்கிறார். இதற்கு முன் மும்பையிலியே வட்டமடித்து வந்த அவரது தங்கை அக்‌ஷராஹாசன் தற்போது தமிழில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் பின்னணி கதையின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். ஜூன் மாதம் மலேசியாவில் தொடங்க இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பதோடு அடுத்தடுத்து புதிய தமிழ்ப் பட கதைகள் கேட்பது என்று முழுக்க சென்னைவாசியாக மாறியிருக்கிறார்.



ஸ்ருதிஹாசன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author