மற்றவர்கள் சொல்வதை கண்டுகொள்வதில்லை: நடிகை வரலட்சுமி

மற்றவர்கள் சொல்வதை கண்டுகொள்வதில்லை: நடிகை வரலட்சுமி
Updated on
1 min read

நடிகை வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. நிக்கோலஸ், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு நடிகை வரலட்சுமி பதிலளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கண்டுகொள்வதில்லை. நான் தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன். நிக்கோலஸ் என் பார்வையில் அழகாக இருக்கிறார். அவர் குழந்தையை நான் பார்த்து பேசியிருக்கிறேன். நிக்கோலஸின் மகள் மிகவும் திறமைசாலி.

விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறார். 15 வயது குழந்தைக்கு இருக்கும் அறிவை விட அபரிமிதமாக இருக்கிறது. திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருந்தால் பிரிவதில் தவறில்லை. என் அப்பா கூட இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in