தமிழ் சினிமா
"வாக்களிக்க முடியவில்லையே" - நடிகர் சூரி வேதனை
சென்னை: நடிகர் சூரி தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றார். ஆனால், வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்த தேர்தல் அதிகாரிகள், சூரியின் பெயர் பட்டியலில் விடுபட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர் ஏமாற்றத்துடன் வாக்களிக்காமல் வெளியேறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டஎக்ஸ் தள பதிவில், ‘என் ஜனநாயககடமையை செலுத்துவதற்காக வந்தேன். ஆனால், அது நடக்கவில்லை என்பது மனவேதனையாக இருக்கிறது. கடந்த எல்லா தேர்தல்களிலும் என் உரிமையை தவறாமல் செலுத்தி இருக்கிறேன். இந்தமுறை வாக்குச்சாவடியில் என்னுடைய பெயர் விடுபட்டு விட்டதாகக் கூறுகின்றனர். எங்கு தவறு நடந்தது என்பது தெரியவில்லை. அடுத்த தேர்தலில் எனது வாக்கை கண்டிப்பாக செலுத்துவேன்’ என்றுவேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
