சிவகணேஷ் இயக்கும் சிற்பி: சிறுகதையை மையமாக உருவாகும் படம்

சிவகணேஷ் இயக்கும் சிற்பி: சிறுகதையை மையமாக உருவாகும் படம்

Published on

ஏஆர் புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிவகுமார், கோதை நாயகி தயாரிக்கும் படம், ‘சிற்பி’. இதில் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் அபாகஸ் கிராண்ட் மாஸ்டர் சரபேஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். முத்துக்குமார், வினோத் சாகர், அரோல் சங்கர், பூமிகா ஷெட்டி, ரோஜா ஸ்ரீ, பாப்ரி கோஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

செந்தில் ஜெகந்நாதனின் எவ்வம் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. திரைக்கதை எழுதி சிவகணேஷ் இயக்கி வருகிறார். சென்னையைச் சேர்ந்தவரான இவர், தமிழில் சிங்கப் பெண்ணே, போலீஸ் டயரி ஆகிய வெப் தொடர்களை ஜீ 5 சேனலுக்காக இயக்கியவர்.

கன்னடத்தில் 8 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். ஸ்ரீ காந்த் இல ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தர்ம பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in