ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநருடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநருடன் கமல்ஹாசன் சந்திப்பு
Updated on
1 min read

பிரபல மெக்ஸிகோ திரைப்பட இயக்குநர் அல்போன்சா குயூரான். ‘கிராவிட்டி’, ‘ரோமா’ படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர். சென்னை வந்திருந்த அவரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து விருந்து வைத்துள்ளார்.

அப்போது மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி, ஒளிப்பதிவாளர் ரவி. கே. சந்திரன், மகேந்திரன் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், “நாங்கள் சினிமா பற்றி மட்டுமே பல மணி நேரம் பேசினோம். நான் மதிய உணவின் போது மாம்பழங்களை அவருக்கு அளித்தேன். அப்போது சித்தார்த், ‘அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கிடைத்திருக்கிறது’ என்று கிண்டல் செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in