ஹைதராபாத்தில் உணவகம் தொடங்கினார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்

ஹைதராபாத்தில் உணவகம் தொடங்கினார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்

Published on

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் உணவகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

க்யூர் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பம் என்ற இந்த உணவகத்தை ஹைதராபாத்தில் உள்ள மாதப்புரில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறார். இங்கு, தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் கிடைக்கும் இந்த உணவகத்தின் அம்பாசிடராகவும் இருப்பார்.

இதுபற்றி ரகுல் ப்ரீத் சிங், “எனது முதல் உணவகத்தை ஹைதராபாத்தில் திறப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் சுவையான, சத்தான உணவு என்ற இலக்கை கொண்டு இதைத் தொடங்கி இருக்கிறோம். எங்கள் உணவகம், உடலுக்கு மட்டுமல்ல, ஆன்மாவுக்கும் உணவளிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in