சர்வதேச படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்

சர்வதேச படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்
Updated on
1 min read

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன், ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கும், ‘சென்னை ஸ்டோரி' என்ற சர்வதேச படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில் முதலில், சமந்தா நடிப்பதாக இருந்தது. டிமேரி என் முராரியின் ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்த நிலையில், தசை அழற்சி பிரச்சினை காரணமாக, சமந்தா விலகினார். இதையடுத்து, ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். இதில் அவர் அனு என்கிற டிடெக்டிவ்வாக நடிக்க இருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகவும் அது உற்சாகத்தை அளிப்பதாகவும் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்த ஸ்ருதிஹாசன், இந்தப் படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in