Published : 18 Apr 2018 08:22 PM
Last Updated : 18 Apr 2018 08:22 PM

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறார் யோகிபாபு

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில், காமெடியனாக நடிக்கிறார் யோகிபாபு.

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். சயிண்டிஃபிக் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், காமெடியனாக கருணாகரன் நடிக்கிறார். இன்னொரு காமெடியனாக யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளார். அஜித்தின் ‘விசுவாசம்’, விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’, விஜய்யின் ‘தளபதி 62’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x