Published : 17 Apr 2018 09:16 AM
Last Updated : 17 Apr 2018 09:16 AM

மகள்கள்தான் என் உலகம் - பூர்ணிமா

ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வரும் பூர்ணிமாவுக்கு அவரது மகள்கள் அமிர்தவர்ஷினி, அகல்யா பாரதி இருவரும்தான் உலகம்.

‘‘சின்னத்திரைக்கு வருவேன், இப்படி செய்தி வாசிப்பாளராவேன் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. என்னோட பள்ளி நாட்களில் முழுக்க விளையாட்டுத்துறையில்தான் கவனம் இருந்தது. தடகளம், கால்பந்து, கபடின்னு ஒரு விளையாட்டையும் விட்டு வைத்ததில்லை. ஐபிஎஸ் ஆகணும்கிற கனவோடு ஓடிக்கொண்டிருந்தேன். கல்லூரி தொடங்கும்போதே காதல் திருமணம். சில வருஷங்களிலேயே கணவரிடமிருந்து பிரிவு. இரண்டு மகள்கள். பிள்ளைகளை சமூகத்தில் முக்கிய அடையாளமாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே விழுந்தது. சொந்த ஊர் அவிநாசி. கோயம்புத்தூர்லயே வானொலியில் ஆர்.ஜே, லோக்கல் சேனல் தொகுப்பாளினின்னு கேரியரைத் தொடர்ந்தேன். அப்படியே சென்னை வந்து புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளராக பயணம் தொடர்ந்தது. இப்போது ஜெயா தொலைக்காட்சின்னு வந்தாச்சு.

பெரிய பொண்ணு பிளஸ் டூ முடித்துவிட்டு காலேஜ் போகப்போறாங்க. சின்னவங்க 7 த் போகப்போறாங்க. ரெண்டு பேருமே கால்பந்து, ஹேண்ட்பால்னு செம திறமைசாலிங்க. பெரியவங்க நேஷனல் அளவிலான போட்டிகளில் கலக்குறாங்க. மூணு பேருமே வெவ்வேறு இடங்களில் ஹாஸ்டலில் தங்கியிருக்கோம். இப்போதைக்கு அதுதான் எங்களுக்கு பாதுகாப்பும்கூட. எனக்குள்ள இருந்த விளையாட்டுத்துறை ஆர்வம் மகள்களுக்கு இயல்பாகவே இருப்பதுதான் என் பெரிய சந்தோஷம். அப்படி ஒரு ஈடுபாடு. சமீபத்துல மகள்கள் ரெண்டு பேரும் சேர்ந்து ‘விளையாட்டுப் போட்டிகளில் வாங்கின இந்த மெடல்களை எல்லாம் வைக்கவாவது ஒரு பெரிய வீடு கட்டணும்மா!’ன்னு சொன்னப்போ அழுகையே வந்துடுச்சு’’ என நெகிழ்ச்சியோடு முடிக்கிறார், பூர்ணிமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x