“இது எனது வாழ்நாள் கனவு!” - இளையராஜா வருகையால் நெகிழ்ந்த தேவி ஸ்ரீ பிரசாத்

“இது எனது வாழ்நாள் கனவு!” - இளையராஜா வருகையால் நெகிழ்ந்த தேவி ஸ்ரீ பிரசாத்

Published on

சென்னை: “இளையராஜா ஒரு நாள் எனது ஸ்டுடிவுக்கு வர வேண்டும். அவருடைய படத்துக்கு அருகில் நின்று அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அது நிறைவேறியுள்ளது” என இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, சிறுவனாக இருந்தபோதிலிருந்தே இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன்.

நான் தேர்வுகளுக்கு படிக்கும்போது கூட அவரது இசை உடனேயிருப்பேன். என்னையும், அவரது இசையையும் பிரிக்க முடியாது. ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற வலுவான விருப்பத்தையும் உறுதியையும் என்னுள் விதைத்தது அவரது இசை.

நான் இசையமைப்பாளரானதும் என்னுடைய ஸ்டுடியோவைக் கட்டினேன். இளையராஜாவின் ஆளுயரப் புகைப்படத்தையும் இங்கு வைத்திருக்கிறேன். அவர் ஒரு நாள் என்னுடைய ஸ்டுடியோவுக்கு வர வேண்டும். அவர் வரும் நாளில் எனது ஸ்டுயோவில் உள்ள அவருடைய படத்துக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு.

நாம் ஆசைப்படும் விஷயத்தை இந்த உலகம் நிச்சயம் நிறைவேற்றும். அப்படித்தான் என் வாழ்நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. என்னுடைய இசைக் கடவுளுக்கு நன்றி. என் வாழ்வில் மிகவும் எமோஷனலான தருணம்” என கூறி, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தேவிஸ்ரீபிரசாத். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in