Published : 22 Feb 2018 05:38 PM
Last Updated : 22 Feb 2018 05:38 PM

மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு: கமல் கட்சி குறித்து கஸ்தூரி கிண்டல்

 

கமல் கட்சி தொடங்கிய நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, மொத்த 'பிக் பாஸ்' டீம் இறங்கியிருக்கு என்று கிண்டலடித்துள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். வெள்ளை நிறத்தில் இணைந்த கைகளின் மத்தியில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் கமலுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு பட்ட விமர்சனங்களை முன்வைத்தும் பிரபலங்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில், ''சினேகன், வையாபுரி, ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன்.. மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு. விவோதான் ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட வரும்ல'' என்று கிண்டல் செய்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x