Last Updated : 13 Feb, 2018 12:29 PM

 

Published : 13 Feb 2018 12:29 PM
Last Updated : 13 Feb 2018 12:29 PM

காலா மற்றும் தளபதி62 படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் கசிவு: படக்குழுவினர் அதிர்ச்சி

'காலா' மற்றும் 'தளபதி62' படங்களின் படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் கசிந்ததால், இரண்டு படக்குழுவினருமே கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் ஃபோட்டோ ஷுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கடும் கட்டுப்பாடுகளோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்தி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தளத்திலிருந்து 10 விநாடி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. படப்பிடிப்பில் விஜய் நடித்த சண்டைக்காட்சியை மொட்டைமாடியிலிருந்து  படமாக்கி இருக்கிறார்கள்.

மேலும், ரஜினி நடித்த 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தார் தயாரிப்பாளர் தனுஷ். அவர் அறிவித்த சில நாட்களிலேயே 'காலா' படப்பிடிப்பின் சண்டைக்காட்சிகள் இணையத்தில் கசிந்திருக்கிறது. இக்காட்சிகள் படப்பிடிப்பு நடைபெறும் போது மானிட்டரிலிருந்து காட்சிப்படுத்தியது போல் தெரிகிறது. இதில் தீப்பற்றி எரியும் அறைக்குள் ரஜினி ஒருவரை அடிப்பது போன்று காட்சி அமைந்திருக்கிறது.

இவ்விரண்டு முக்கிய படங்களின் காட்சிகள் கசிவால், தமிழ் திரையுலகம் கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்து படப்பிடிப்பு நடத்தினாலும், படப்பிடிப்பு தளத்தின் காட்சிகள் கசிவு என்பது பெரிய நடிகர்களின் படத்திற்கு பெரும் பின்னடைவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x