விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: உயிர்தப்பிய ராஷ்மிகா உள்ளிட்ட பயணிகள்

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: உயிர்தப்பிய ராஷ்மிகா உள்ளிட்ட பயணிகள்

Published on

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ் ,இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை ஏர் விஸ்தாரா விமானத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார். அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸும் பயணித்தார். புறப்பட்ட அரைமணி நேரத்தில் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

விமானம் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து, பயத்தில் உறைந்தனர். உடனடியாக விமானி மும்பைக்கு விமானத்தைத் திருப்பி, பத்திரமாகத் தரையிறக்கினார். இந்நிலையில் , ரஷ்மிகாவும் ஷ்ரத்தாவும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புற இருக்கையை அழுத்தமாக மிதித்தபடி இருக்கும் புகைப்படத்தை, இன்ஸ்டா ஸ்டோரியில் ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். அதனுடன், ‘இப்படித்தான் உயிர் பிழைத்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in