ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா

ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா

Published on

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கேரக்டரில் நடித்தவர் சோபிதா துலிபாலா. இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர், இப்போது, 'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். 'ஸ்லம்டாக் மில்லியனர்' தேவ் படேல் இயக்கி நடித்துள்ள இந்தப் படத்தில், விபின் சர்மா, சிக்கந்தர் கெர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷரோன் மேயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in