Published : 25 Feb 2018 11:12 AM
Last Updated : 25 Feb 2018 11:12 AM

நடிகர் விஷால் அமெரிக்காவில் சிகிச்சை

நடிகர் விஷால் இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை ஏற்பட்டது. மேலும், ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த போது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூட்டுவலி, தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x