திருப்பதியில் தனுஷ் பட ஷூட்டிங்: பக்தர்கள் அவதி

திருப்பதியில் தனுஷ் பட ஷூட்டிங்: பக்தர்கள் அவதி
Updated on
1 min read

சென்னை: நடிகர் தனுஷ் இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை ராம்மோகன் ராவ், சுனில் சாரங்க் தயாரித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படப்படிப்பு திருப்பதியில் நடைபெறுகிறது. நேற்று காலை 6 முதல் மதியம் 1 மணி வரை இதன் படப்படிப்பை நடத்திக்கொள்ள திருப்பதி போலீஸார் அனுமதித்திருந்தனர்.

திருமலைக்குச் செல்லும் அலிபிரி நுழைவு வாயில் அருகே, கருடன் சிலை இருக்கும் இடத்தில் நேற்று படப்பிடிப்பு நடந்தது. இதற்காக போக்குவரத்தை மாற்றுப் பாதையில் போலீஸார் திருப்பி விட்டனர். இதனால் திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பல வேன்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் கூட அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல முடியாமல் நின்றன. இதன் காரணமாக பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குத் தரிசனத்துக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in