பிப்ரவரியில் நிச்சயதார்த்தமா? - விஜய் தேவரகொண்டா விளக்கம்

பிப்ரவரியில் நிச்சயதார்த்தமா? - விஜய் தேவரகொண்டா விளக்கம்

Published on

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய தேவரகொண்டாவும் ‘கீத கோவிந்தம்’ படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், ‘டியர் காம்ரேட்’ படத்திலும் சேர்ந்து நடித்தனர். இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.பிப்ரவரியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து விஜய தேவரகொண்டா கூறும்போது, “பிப்ரவரியில் திருமணமோ, நிச்சயதார்த்தமோ செய்ய போவதில்லை. 2 வருடத்துக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியை கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in