‘கங்குவா’ எனக்கு ஸ்பெஷல்: படப்பிடிப்பை நிறைவு செய்த சூர்யா பகிர்வு

‘கங்குவா’ எனக்கு ஸ்பெஷல்: படப்பிடிப்பை நிறைவு செய்த சூர்யா பகிர்வு

Published on

சென்னை: ‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘கங்குவா’ படத்தில் எனது கடைசி காட்சி எடுத்து முடிக்கப்பட்டது. ஒட்டுமொத்த யூனிட்டும் நேர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தது. இது ஒன்றுக்கான முடிவு மற்றும் பலவற்றுக்கான தொடக்கமாக இருக்கிறது. இந்த நினைவுகள் அனைத்தையும் தந்த அன்புக்குரிய சிவா மற்றும் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ’கங்குவா’ எனக்கு மிகப்பெரிய மற்றும் ஸ்பெஷலான படம். அதை நீங்கள் திரையில் காணவேண்டும் என்று நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘கங்குவா’. இதில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்படப் பலர் நடிக்கின்றனர். பீரியட் படமான இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகி வரவேற்பை பெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in