ஃபேன்டஸி ஆக்‌ஷன் படமாக உருவாகும் ‘ஹனுமான்’

ஃபேன்டஸி ஆக்‌ஷன் படமாக உருவாகும் ‘ஹனுமான்’

Published on

தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஹனுமான்’. பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள இந்தப் படத்துக்குத் தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி கவுடா இசை அமைத்துள்ளார். பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யுனிவர்ஸாக உருவாகும் இந்தப் படம் பான் இந்தியா முறையில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது.

புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஃபேன்டஸி ஆக்‌ஷன் படத்தில் ஹீரோ தேஜா சஜ்ஜா, ஹனுமானின் அதீத சக்தியைக் கொண்டவராக நடிக்கிறார்.

வினய் ராய் வில்லனாக நடிக்கிறார். எதிரிகளிடம் இருந்து உலகை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரம்மாண்டமான டீஸர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in