Published : 03 Jan 2018 12:20 pm

Updated : 03 Jan 2018 12:21 pm

 

Published : 03 Jan 2018 12:20 PM
Last Updated : 03 Jan 2018 12:21 PM

ஜனவரி 6-ம் தேதி வெளியாகிறது சண்டக்கோழி 2 டீஸர்

6-2

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துவரும் 'சண்டக்கோழி 2' டீஸர் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பிரதான காட்சிகள் அனைத்துமே இந்த அரங்கிலேயே சுமார் 45 நாட்கள் காட்சிப்படுத்தியது படக்குழு. இம்மாத இறுதியில் காரைக்குடி மற்றும் தேனியில் இதர காட்சிகளை படமாக்கவுள்ளார்கள்.

இந்நிலையில் மலேசியாவில் நடைபெறவுள்ள நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழாவில் 'சண்டக்கோழி 2' டீஸர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சண்டக்கோழி'. 2005-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. இதன் 2-ம் பாகமாக இப்படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் லிங்குசாமி.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author