‘சபாநாயகன்’ படத்துக்காக உடல் எடை குறைத்த அசோக் செல்வன்

‘சபாநாயகன்’ படத்துக்காக உடல் எடை குறைத்த அசோக் செல்வன்

Published on

சென்னை: அசோக் செல்வன், மேகா ஆகாஷ்,கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி , விவியா உட்பட பலர் நடித்துள்ள படம்,‘சபா நாயகன்’. சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கிளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா, கேப்டன் மேகா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பாலசுப்பிரமணியெம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் அசோக் செல்வன் கூறியதாவது:

இது குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஜாலியான படம். இதில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன். இதில், நடனம், நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். இது எனக்கு புதிய விஷயம். வருகிற கதையில் இருந்துதான் ஒரு நடிகர் சில விஷயங்களைத் தன்னிடம் இருந்து வெளிக் கொண்டு வர முடியும். இந்தக் கதை அதற்கான வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறது. இந்தப் படத்தில் அதிகமான புதிய திறமையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகன் பெயர் சபா. அதனால் ‘சபாநாயகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் பள்ளிக்கூட பையனாகவும் நடித்திருக்கிறேன். அதில் நடிப்பதற்காக, மூன்றே வாரத்தில் பத்து கிலோ உடல் எடை குறைத்தேன். இந்தப் படத்தில் நாஸ்டால்ஜியா விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனைவரும் கதையோடு ஒன்ற முடியும்.

இவ்வாறு அசோக் செல்வன் கூறினார். தயாரிப்பாளர் ஐயப்பன் உட்பட படக்குழுவினர் உடன் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in