Last Updated : 08 Jan, 2018 05:21 PM

 

Published : 08 Jan 2018 05:21 PM
Last Updated : 08 Jan 2018 05:21 PM

பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய பாஸ்கர் ஒரு ராஸ்கல்

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது.

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நைனிகா, ரோபோ சங்கர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இதன் அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கை செய்யப்பட்டது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த இப்படம் தற்போது ஜனவரி 26-ம் தேதி வெளியீட்டிற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் கதையாகும்.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள 'பரதன் பிலிம்ஸ்' நிறுவனம் தான் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விநியோக உரிமையையும் வைத்திருக்கிறது. வெளியீட்டு மாற்றத்திற்கு இதுவே காரணம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x