நயன்தாரா ரூ.5 கோடி; அல்லு அர்ஜுன் ரூ.6 கோடி: விளம்பர பட சம்பளத்தை உயர்த்திய நட்சத்திரங்கள்

நயன்தாரா ரூ.5 கோடி; அல்லு அர்ஜுன் ரூ.6 கோடி: விளம்பர பட சம்பளத்தை உயர்த்திய நட்சத்திரங்கள்

Published on

மும்பை: நடிகர், நடிகைகள் விளம்பரப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் உட்பட முன்னணி நடிகர், நடிகைகள் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகளும் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விளம்பரங்களில் நடிப்பதற்கான ஊதியத்தை 2 வருடங்களுக்கு முன் அவர்கள் வாங்கியதை விட 8 மடங்கு உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘புஷ்பா’ படத்துக்கு முன்பு, விளம்பர படத்துக்கு ரூ.35 லட்சம் சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன், இப்போது ரூ.6 கோடி கேட்பதாகக் கூறப்படுகிறது. நடிகை மாதுரி தீக்‌ஷித், 8 மணி நேரம் மட்டும் நடிக்க ரூ.1 கோடி கேட்கிறார். கியாரா அத்வானி, ஒரு நாளுக்கு ரூ.1.5 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை கேட்கிறார் என்கிறார்கள். நகைக்கடை விளம்பரங்களில் ஆலியா பட், ஜுனியர் என்.டி.ஆர், கரீனா கபூர், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இவர்களும் தங்கள் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படு கிறது. நகைக்கடை விளம்பரத்தில் நடிக்கும் நயன்தாரா ரூ.5 கோடி வாங்குகிறார்.

டாப் ஹீரோக்கள் ரூ.8 கோடி வரை, ஒரு நாள் சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது. “இவ்வளவு கொடுத்தாலும் வருடத்துக்கு மூன்று நாள் மட்டுமே, சம்மந்தப்பட்ட பிராண்ட் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுக்கிறார்கள், போட்டோஷூட், கடை திறப்பு உட்பட. படப்பிடிப்பில் இரண்டு முறைக்கு மேல் உடைகளை மாற்ற மறுக்கிறார்கள். எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை” என்ற குற்றச்சாட்டுக்கும் குறைவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in