லாரன்ஸை ஹீரோவாக்கிய இயக்குநர் அற்புதன் மரணம்

லாரன்ஸை ஹீரோவாக்கிய இயக்குநர் அற்புதன் மரணம்
Updated on
1 min read

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகமான படம் ‘அற்புதம்’. இந்தப் படம் மூலம் இயக்குநர் ஆனவர் அற்புதன். இவர் ஷாம் நடித்த ‘மனதோடு மழைகாலம்’, தெலுங்கில் உதய்கிரண் நடித்த ‘செப்பவே சிறுகாளி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த இவர், அடுத்து யோகி பாபு நடிக்கும் படத்தை இயக்க இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 53. மறைந்த அற்புதனுக்கு ஜாஸ்மின் என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in