கோப்பு படம்
கோப்பு படம்

மருத்துவமனையில் புஸ்ஸி ஆனந்திடம் நலம் விசாரித்த நடிகர் விஜய்

Published on

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த வெற்றி விழாவுக்கு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். கடந்த சில நாட்களாகவே அவர் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பான தொடர் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதீத உடல் சோர்வு காரணமாக நேற்று (நவ.2) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக புஸ்ஸி ஆனந்த் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை நடிகர் விஜய் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இன்று ‘விஜய் 68’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் பாங்காக் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in