லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவான படத்துக்கு சென்சார் எதிர்ப்பு

லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவான படத்துக்கு சென்சார் எதிர்ப்பு
Updated on
1 min read

லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம், 'ரா ..ரா ..சரசுக்கு ராரா...'. இதை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஆர் .ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.கே.வி இசை அமைத்துள்ளார். 9வி ஸ்டுடியோஸ்நிறுவனம் நவ. 3ம் தேதி படத்தை வெளியிடுகிறது. இந்தப்படத்தின் அறிமுகவிழா சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் கேசவ் தெபுர் கூறியதாவது:

இந்தப் படத்துக்கு சென்சாரில் 60 கட் கொடுத்தார்கள். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு அனுமதிக்க முடியாது என்றார்கள். ரிவைசிங் கமிட்டி சென்றோம். அங்கே நடிகை கவுதமி தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்லப் போகிறீர்கள் என்றார்.லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன, நடக்கக் கூடாது என்று சொல்கிறோம் என்றோம். 4 பக்க அளவில் குறிப்பிட்டு சிலவற்றை நீக்கச் சொன்னார்கள். விளக்கம்அளித்தேன். அப்போது கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கடிதம் கொடுங்கள் என்றார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சென்சார் விதிகளை 5 ஆண்டுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும்.

இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது சிரமமாக இருக்கிறது. ஹார்டு டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கே.ராஜன், படத்தில் நடித்துள்ள மாரி வினோத், விஜய் பிரசாத், காயத்ரி,சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா உட்பட பலர் கலந்து கொண்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in