நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடிக்கும் படம், ‘அன்னபூரணி’. இதில் கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். நயன்தாராவின் 75வது படமான இதை, ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், பிராமணப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா, பிஸினஸ் லாஜிஸ்டிக்ஸ் புத்தகத்தைப் படிப்பது போல், அதனுள்ளே அசைவ உணவு சமைப்பதற்கான ரெசிபி புத்தகத்தை மறைத்து படிக்கும் காட்சி இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டிச.1-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in