Published : 17 Jan 2018 04:33 PM
Last Updated : 17 Jan 2018 04:33 PM

விஜய் சந்திப்பில் நடந்தது என்ன?- மோகன் ராஜா ட்வீட்

'வேலைக்காரன்' படம் குறித்து விஜய் பெருமையுடன் கூறியது எனக்கான சிறந்த தருணங்களில் ஒன்று என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜா நடிகர் விஜய்யை திடீரென்று சந்தித்துப் பேசியுள்ளார். இது குறித்து இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ''என் அன்பு நண்பர் விஜய்யை நீண்ட நாட்கள் கழித்து சந்தித்தேன். என்ன ஒரு மனிதர் அவர். நாங்கள் எல்லாவற்றையும் பேசினோம். இடைப்பட்ட நாட்களில் நாங்கள் தவறவிட்ட அனைத்து அற்புதமான விஷயங்கள் குறித்தும் பேசினோம். 'வேலைக்காரன்' படம் குறித்து விஜய் பெருமையுடன் கூறியது எனக்கான சிறந்த தருணங்களில் ஒன்று'' என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் 'வேலாயுதம்' படத்தில் நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x