பிரபாஸுக்கு 230 அடி கட் அவுட்

பிரபாஸுக்கு 230 அடி கட் அவுட்
Updated on
1 min read

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' டிச. 22-ம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து அமிதாப்பச்சன், கமல்ஹாசனுடன் 'கல்கி 2898 ஏடி' , 'ஸ்பிரிட்' படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிறந்த நாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்தனர். இதை முன்னிட்டு, தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி எனும் இடத்தில் 230 அடி உயர கட் அமைத்துள்ள அவர்கள், பால் அபிஷேகம் மற்றும் பூக்கள் தூவி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in