தென்னிந்திய சினிமா
தமிழில் ரீமேக் ஆகிறது தெலுங்கு படமான ‘பேபி’
பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள தெலுங்கு படம், ‘பேபி’. ரொமான்டிக் படமான இதில் வைஷ்ணவி சைதன்யா நாயகியாக நடித்தார். நாகேந்திர பாபு உட்பட பலர் நடித்தனர். சாய் ராஜேஷ் நீலம் எழுதி இயக்கிய இந்தப் படத்துக்கு விஜய் பல்கனின் இசை அமைத்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.90 கோடி வசூலித்தது. இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து இதே டீம், மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்துள்ளது.
இதற்கிடையே, ‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா பெற்றுள்ளார். தமிழில், இளம் ஹீரோ ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
