ஆஸி. நாடாளுமன்றத்தில் மம்மூட்டிக்கு கவுரவம்

ஆஸி. நாடாளுமன்றத்தில் மம்மூட்டிக்கு கவுரவம்
Updated on
1 min read

கொச்சி: நடிகர் மம்மூட்டியை கவுரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் புகைப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது.

வர்த்தகம், வணிகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 'இந்தியாவின் நாடாளுமன்ற நண்பர்கள்' குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மம்மூட்டியின் உருவம் கொண்ட 10 ஆயிரம் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோராவிடம் முதல் தபால் தலை வழங்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற நண்பர்கள் அமைப்பின் தலைவரும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசின் பிரதிநிதியுமான டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன் எம்.பி. இதை வெளியிட்டார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in