பிரபல ஈரான் இயக்குநர், மனைவி கொலை

பிரபல ஈரான் இயக்குநர், மனைவி கொலை
Updated on
1 min read

சென்னை: பிரபல ஈரான் இயக்குநர் டாரியுஷ் மெர்ஜுயி (Dariush Mehrjui). ஈரானில் 1970-களில் புதிய அலை சினிமா இயக்கத்தைத் தொடங்கியவர். நவீன ஈரானிய சினிமா இவரிடம் இருந்துதான் தொடங்குகிறது என்கிறார்கள். பெரும்பாலும் இலக்கியம் மற்றும் நாடகங்களை படமாக்கியவர் இவர். ‘தி கவ்’, ‘தி சைக்கிள்’, ‘தி பார் ட்ரீ’, ‘டு ஸ்டே அலைவ்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் திரைப்படங்களில் சத்யஜித் ரேவின் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுவது உண்டு.

இவர் தனது மனைவி வஹிதே முகமதிஃபருடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் உடல்கள் ரத்த வெள்ளத்தில் வீட்டில் இருந்து் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மர்மநபரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் மகள் மோனா கடந்த 14ம் தேதி இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கத்திக் குத்து காயங்களுடன் தனது பெற்றோர் உயிரிழந்து கிடந்ததாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரானின் பிரபலமான இயக்குநர் ஒருவர் மனைவியுடன் குத்திக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015-ம்ஆண்டு நடந்த கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in