ஜி.வி.பிரகாஷின் 25வது படம்: கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

ஜி.வி.பிரகாஷின் 25வது படம்: கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

Published on

சென்னை: இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் , பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் மூலம், தான் நடிக்கும் 25- வது படத்தைத் தயாரிக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடிக்கிறார். 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, 'கல்லூரி' வினோத், சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் சபுமோன் உட்பட பலர் நடிக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். தீவிக் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து சென்னையில் தொடங்கி வைத்தார். படத்துக்கு 'கிங்ஸ்டன்' என்று பெயர் வைத்துள்ளனர்.

கடல் பின்னணியில் திகில் சாகச படமாக தயாராகும் இதை, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

அவர் கூறும்போது,"இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது. உடனடியாகத் தயாரிக்க முடிவு செய்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்பப் புள்ளி மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசனுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in