Published : 18 Dec 2017 06:18 PM
Last Updated : 18 Dec 2017 06:18 PM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.19 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்.19) கேஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி | A SPECIAL DAY / YEKROUZBEKHOSOS | DIR: HOMAYOUN ASSADIAN | PERSIAN | 2017 | 93'

தனது தங்கைக்கு உள்ள இதய நோயைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் குடைந்துகொண்டிருக்கிறது ஹமீது என்ற இளைஞனுக்கு. இதற்காக வித்தியாசமான ஒரு வாய்ப்பை கண்டுபிடிக்கிறான். அவர்களுக்கு அந்த வாய்ப்பு எப்படி நல்லபடியாக அமைந்தது என்பதை இப்படம் சொல்கிறது.

பகல் 12.15 மணி | SEVEN DAYS / SETTE GIORNI | DIR: ROLANDO COLLA | ITALY, SWITZERLAND | 2016 | 96'

இவானும் சியாராவும் ஒரு சிறிய சிசிலியன் தீவில் சந்தித்துக்கொள்கிறார்கள். இவானின் சகோதரனும் சியாராவின் சிறந்த நண்பருமானவருக்கு திருமணம் நடைபெற இன்னும் 7 நாட்களே உள்ளன. இவானின் அச்சம் எல்லாம் அவனது பழைய உறவில் ஏற்பட்ட தோல்விகளைப் பற்றித்தான். இந்நிலையில் சியாராவின் திருமணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாத நிலையில் அந்த ஜோடி காதலில் விழுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக முடிவெடுக்கின்றனர். இதனால் தங்கள் திருமணநாளை தள்ளிப்போட அவர்கள் விரும்புகிறார்கள். ஒரு ஏழு நாட்களில் ஏழு அத்தியாயங்களில் ஏழு அத்தியாயங்களில் உணர்ச்சிமயமான நிலைகளை விவரிக்கிறது.

பிற்பகல் 2.45 மணி | THE ART OF LOVING / SZTUKAKOCHANIA HISTORIA MICHALINY WISLOCKIE | DIR: MARIA SADWSKA | POLICH / GERMAN | 2017 | 108'

சோவியத் யூனியனில் போலந்து இருந்தபோது நடைபெறும் கதை இது. மிச்சாலினவிஸ்லோகா, மிகப் புகழ்பெற்ற பிரபல பாலியல் நிபுணர், போலந்து மக்களின் பாலியல் வாழ்க்கை என்றென்றும் மாற்றிவிடக்கூடிய தனது புத்தகத்தை வெளியிட உரிமைப் போராட்டம் நடத்திய வரலாற்றைப் பேசுகிறது தி ஆர்ட் ஆஃப் லவ்விங் திரைப்படம்.

மாலை 4.45 மணி | A DAY AFTER / GEU-HU | DIR: SANG-SOO HONG | KOREAN | 2017 | 92'

சியோலில் ஒரு சிறிய பதிப்பகம் ஒன்றை நடத்தி வரும் போங்வான், அன்று சீக்கிரமாக எழுந்துகொள்கிறார். அதிகாலையில் மிகவும் சீக்கிரம் அவர் எழுந்து கொண்டதற்கு என்ன காரணம்? அவரது மனைவி அவரை கேள்விக்கணைகளால் தொடுக்கிறார். ஆனால் போங்வான் மேலோட்டமான பதில்களையே தருகிறார். அவர் வேலைக்காகவும், விடியாத இருட்டில் தெருக்களில் நடந்து செல்லும் சமயத்திலும், ஒரு மாதத்திற்கு முன் வேலையைவிட்டுச் சென்ற பெண்ணைப் பற்றியே சிந்திக்கிறார். அதன்பிறகு தனது அலுவலகத்தில் அவர் ஏரியூம் என்ற தனது புதிய செகரெட்டரியைச் சந்திக்கிறார். அவள் மிகவும் அழகான இளம் பெண். தனது முதல் நாள் வேலையை அப் பெண் எடுத்துக்கொள்கிறார். இதற்கிடையில் வீட்டில் மனைவி தனது கணவன் எழுதிய காதல் கவிதையைக் கண்டுபிடிக்கிறார். முகம் சிவக்க அதே வேகத்தோடு பதிப்பக அலுவலகத்திற்கு வந்து சண்டை போடுகிறார். அவரது கணவரின் செகரட்டரியை தாக்குகிறார்.

பிற்பகல் 7.00 மணி | THE NOTHING FACTORY / A FABRICA DE NADA | DIR: PEDRO PINHO | POLISH | 2017 | 132'

ஒரு இரவில், ஒரு தொழிலாளி ஒருவர் தமது தொழிற்சாலைகளிலிருந்து இயந்திரங்களை திருடிச்செல்ல ஏற்பாடு செய்திருப்பதை உணர்கிறார். அவை மிகப்பெரிய பணிநீக்கத்தின் முதல் சமிக்ஞையாகும் என்பதை அவர்கள் விரைவில் புரிந்துகொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தனி பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைக்க மறுக்கின்றனர், அவர்கள் தங்கள் பணியிடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றனர். அவர்களது எதிர்பாராத நிலையில் அவர்களது எண்ணத்தை நிர்வாகம் உடைக்கிறது. அவர்கள் தொழிற்சாலை பாதி காலியான நிலையில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறுகிறார்கள். அவர்கள் சுற்றியுள்ள உலகம் வீழ்ச்சியுற்றதால், புதிய ஆசைகளும் வெளிப்படத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x